ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைப்பு

புளோரிடா: இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 விண்கலம் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், நேற்று மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் பூஸ்டர்களின் திரவு ஆக்சிஜன் கசிவு கண்டறியப்பட்டது. இதனையடுத்து விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

* 5 முறை ஒத்திவைப்பு
ஆக்சியம் – 4 முதலில் மே 29ம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் ஜூன் 8ம் தேதியும், பிறகு ஜூன் 10ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. 10ம் தேதி மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு நேற்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது. திரவு கசிவு காரணமாக இதுவும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: