அரிய கனிம ஏற்றுமதி: சீனா, அமெரிக்கா இடையே உடன்பாடு

வாஷிங்டன்: அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா விதித்திருந்த தடையை விலக்கிக் கொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளது. செமிகண்டக்டர் வடிவமைப்பு மென்பொருளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விதித்த தடையும் ரத்தாகும். அமெரிக்க அமைச்சர் ஹாவர்டு லுட்னிக், சீன வர்த்தக துணை அமைச்சர் லி செங் காங் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டது. ஜூன் 5ல் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக லண்டனில் இருநாட்டுப் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகச் சிக்கலை தீர்க்க ஆகஸ்ட் 10ம் தேதி வரை அவகாசம் உள்ளது. சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகத்தில் உள்ள இதர பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post அரிய கனிம ஏற்றுமதி: சீனா, அமெரிக்கா இடையே உடன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: