துபாய்: ஈரான் நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் 9 தீவிரவாதிகளுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அயதுல்லா ருஹோல்லாவின் கல்லறை மீது கடந்த 2017ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதிகள் 9 பேர் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் 9 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
The post நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு: ஈரானில் 9 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் appeared first on Dinakaran.