பிரான்ஸ் பள்ளியில் பை சோதனையின் போது ஊழியர் குத்தி கொலை: 15 வயது மாணவன் கைது

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எடுத்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து தற்போது பள்ளிக்கு வரும் சிறுவர்களின் பைகளை சோதனையிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டின் இரண்டுமாத காலத்தில் சிறுவர்களின் பை சோதனைகளின்போது 186 கத்திகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக 32 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வடகிழக்கு பிரான்சின் நோஜென்ட்டில் உள்ள பிராங்கோயிஸ் டோல்டோ பள்ளியில் நேற்று வழக்கம்போல் சிறுவர்களின் பைகள் சோதனையிடப்பட்டன. அப்போது சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒரு ஊழியரை 15 வயது மாணவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் மாணவனை கைது செய்தனர்.

The post பிரான்ஸ் பள்ளியில் பை சோதனையின் போது ஊழியர் குத்தி கொலை: 15 வயது மாணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: