பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், பவுலா படோஷா வெற்றி


பாரிஸ்: பாரீசில் நடந்துவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 2-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும் 5-ம் நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 42-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் ரெபேக்கா ஸ்ராம்கோவாவை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். இகா ஸ்வியாடெக்குக்கு பிரெஞ்சு ஓபனில் இது தொடர்ச்சியான 22-வது வெற்றியாகும்.  எம்மா ராடுகானு 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் வங் சின்யுவை தோற்கடித்தார்.

9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ 0-6, 1-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனீரோவிடம் தோல்வி அடைந்தார். 4 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா, ஸ்பெயினின் பவுலா படோஸாவுடன் மோதினார். இதில் 6-7(1), 6-1, 6-4 என்ற புள்ளி கணக்கில் படோஸா, ஒசாகாவை வீழ்த்தினார்.

The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், பவுலா படோஷா வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: