சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை சீரானது

சென்னை: சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை சீரானது. நேற்று மாலை 5:50 மணிக்கு, சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் தடத்தில், மீனம்பாக்கம் அருகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நேரடியாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆலந்துார் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

இதேபோல், விம்கோ நகர் – விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள், மீனம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. தொழில்நுட்ப பணியாளர்கள், மீனம்பாக்கத்தில் கோளாறு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின், விம்கோ நகர் – விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த கோளாறால், நேரடியாக விமான நிலையம் செல்ல வேண்டிய பயணியர், மூத்த குடிமக்கள் கடும் அவதிப்பட்டனர். சிலர், மாநகர பேருந்துகள், கால்டாக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

இந்நிலையில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை சீரானது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. விம்கோ நகர் – விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ – பரங்கிமலை செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

The post சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை சீரானது appeared first on Dinakaran.

Related Stories: