வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா

 

பெரம்பலூர், ஜூன் 10: வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் நடந்த வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவ ட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது வாலாம்பிகா சமேத வாலீஸ்வரர் திருக்கோவில். வானர அரசரான வாலி இவ்வூரில் உள்ள ஈசனை பூஜித்து வழிபட்டதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, புராதான பிரசித்தி பெற்ற இக்கோயிலில்வடக்கு பார்த்த நிலையில் 7 அடி உயரத்தில் பால தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கிறார். இதனிடையே முருகனுக்கு உகந்த நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திரத்தையொட்டி சிறப்பு மகா அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நேற்று டைபெற்றது
பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், திருநீர் பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தோடு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து அலங்காரம் மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் வாலிகண்டபுரம், பெரம்பலூர், மேட்டுப்பாளையம், வேப்பந்தட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கத்தோடு தரிசனம் செய்தனர்.

The post வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: