24ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

பெரம்பலூர், ஜூன். 6: பெரம்பலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 24ம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கை/ திருநம்பி/ இடைப் பாலினர்களின் விவரங்களை பதிவு செய்து அடையாளஅட்டை வழங்குதல், ஆதார் அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம்,

வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் பெற்று வழங்குவதற்காக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற (24ஆம்தேதி) செவ்வாய்க்கிழமை மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இம் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 24ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: