ஈரோடு, ஜூன் 12: பெருந்துறையில் நடந்த வேளாண் கண்காட்சியில் ரூ.175.23 கோடி மதிப்பீட்டில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே நடந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடந்த விழாவில் ஈரோடு மாவட்டத்தில் ரூ.15.70 கோடி மதிப்பீட்டிலான 16 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், ரூ.159.11 கோடி மதிப்பீட்டிலான 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள் பின்வருமாறு:
*புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்*
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.136 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 2,000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஜீரோ திரவ வெளியேற்றும் வகையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து, கட்டுமானப் பணிகள், இயக்கி, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நீர்வளத்துறை சார்பில் அணை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கீழ்பவானி அணையை(பவானி சாகர் அணை) ரூ.19 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் நீர்பாசன வசதிப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் 2 விவசாய சேமிப்பு கிடங்குகள் மற்றும் 6 கதிரடிக்கும் களங்கள் என மொத்தம் ரூ.159 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கப்பட்ட வளர்ச்சி பணிகள்: கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பவானி ஜம்பையில் ரூ.59 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை மருந்தகம், கூட்டுறவு துறை சார்பில் சத்தியமங்கலம் கோணமூலை கிராமத்தில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் 1000 மெட்ரிக் டன் ஏலக்கூட கிடங்கு, கண்ணம்மாபுரத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை அலுவலக கட்டடம், ரூ.51 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட முகாசிப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டடம், நீர்வளத்துறை சார்பில் தாளவாடி மல்லன்குழி பீமராஜ் நகரில் ரூ.40 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை, மெட்டல்வாடி அருகில் ரூ.38 லட்சத்து 5 ஆயிரம் செலவில் தடுப்பணை, பைனாபுரம் கிராமம் தொட்டமுடுகரையில் ரூ.33 லட்சத்து 70 ஆயிரம் செலவில் தடுப்பணை, மாதேஸ்வரன் கோவில் அருகில் ரூ.20 லட்சத்து 70 ஆயிரம் செலவில் தரைப்பாலம் மற்றும் மண் சாலை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அந்தியூர் கொண்டையம்பாளையம் கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர் களம், சத்தியமங்கலம் பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம்,
சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10 கோடி செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையம், வனத்துறை மூலம் அந்தியூர் கொங்காடை கிராமத்தில் ரூ.26 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை, கேர்மாளம் கெத்தேசால் காவல் சுற்றில் 2 கிமீக்கு ரூ.10 லட்சத்து 55 ஆயிரம் செலவிலும், கேர்மாளம் மேற்கு காவல் சுற்றில் 1 கிமீக்கு ரூ.5 லட்சத்து 51 ஆயிரம் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள யானை புகா அகழிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெருந்துறை பொன்முடி ஆதிதிராவிடர் குடியிருப்பு கிராமத்தில் ரூ.25 லட்சத்து 47 ஆயிரம் செலவில் விவசாய சேமிப்பு கிடங்கு, அந்தியூர் நகலூர் ஊராட்சி சோலைகர் காலனியில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம் என மொத்தம் ரூ.15 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 16 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதுதவிர வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 4,524 பயனாளிகளுக்கு ரூ.25.41 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த கண்காட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், சுப்பராயன், எம்எல்ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாச்சம், சந்திரகுமார், பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் சுப்பையன், வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், சர்க்கரைத்துறை இயக்குநர் அன்பழகன், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் குரு சரஸ்வதி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையர்(பொ) தனலட்சுமி, ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், எஸ்பி சுஜாதா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பெருந்துறையில் நடந்த வேளாண் கண்காட்சியில் ரூ.175.23 கோடியில் அரசு வளர்ச்சி திட்டபணிகள் appeared first on Dinakaran.