இந்திய ராணுவ வீரர்களுக்கு உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கி அசத்திய சிறுவன்

கரூர், மே. 13: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின் போது, தான் உண்டியலில் சேகரித்த பணத்தை, ராணுவ வீரர்களின் நலனுக்கு பயன்படுத்தும் வகையில் வழங்குவதற்காக 7 வயது சிறுவன் பெற்றோர்களுடன் வந்து வழங்கினான்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை கணபதி நகரைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்- பவித்ரா தம்பதியினர். இவர்களின் மகன் தன்விஷ் (7). இவர், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வருகிறார்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின்போது, தன்விஷ், தனது பெற்றோர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர்களுடன், கடந்த சில நாட்களாக தான் சேகரித்த காசுகள் கொண்ட உண்டியலுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். இதுகுறித்து தன்விஷ் பெற்றோர்கள் கூறுகையில், தன்விஷ் கடந்த சில மாதங்களாக நாங்கள் வழங்கிய காசுக்களை உண்டியலில் சேகரித்து வந்துள்ளான்.

இந்நிலையில், சிலர் வழங்கிய அறிவுரைகளின்படி, இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, நாட்டுக்காக போரிட்ட ராணுவ வீரர்களின் நலனுக்கு பயன்படுத்தும் வகையில் தான் சேகரித்த காசு உதவிட வேண்டும் என்ற மனநிலையில் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

The post இந்திய ராணுவ வீரர்களுக்கு உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கி அசத்திய சிறுவன் appeared first on Dinakaran.

Related Stories: