தாம்பரம்: வெயில் காலத்தை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தில் திறக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டத்தின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரிசூலம், பல்லாவரம், பம்மல், ராதா நகர், ஜமீன் ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேற்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், ஜூஸ், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
உடன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தமிழ்மாறன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் திருநீர்மலை த.ஜெயக்குமார், ஏ.கே.கருணாகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சத்திய பிரபு, மாமன்ற உறுப்பினர்கள் ரம்யா, கண்ணன், கல்யாணி டில்லி, இளைஞர் அணி நிர்வாகிகள் இளவரசன், டில்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பல்லாவரம் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.