மேலும் ராணுவ மோதல்கள், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இரு நாடுகளிலும் உள்ள பொது மக்களின் பாதுகாப்பில் ஜி7 அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கும் ஜி7 அழைப்பு விடுப்பதாகவும் அமைதியான முடிவை நோக்கி 2 நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனிடையே பஞ்சாபின் குடியிருப்பு பகுதிகள் உள்ள பகுதி மீது பாகிஸ்தான் நடத்திய ஷெல் வெடிகுண்டு வீச்சில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
The post இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் appeared first on Dinakaran.