பாஜ பிரமுகரின் ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை: வீடியோ வைரல், ஓட்டலுக்கு சீல்

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி கொங்குநாடு ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பாஜ பிரமுகரான காளியப்பன் என்பவர் இந்த ஓட்டலை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் ஒரு குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஒரு பிரியாணி மற்றும் அசைவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் ஊழியர்கள் கொண்டுவந்து கொடுத்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது, அதில் பெரிய அளவிலான கருப்பு நிறத்தில் ஒரு பொருள் இருந்தது.

அதனை தனியாக எடுத்து பார்த்தபோது தவளை இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஓட்டல் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உணவை சாப்பிட்டவர்கள் உணவில் தவளை இருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உத்தரவின்பேரில் பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அதிகாரி வேலவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று மாலை நாவலடி உணவகத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஓட்டலை மூடி சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பாஜ பிரமுகரின் ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை: வீடியோ வைரல், ஓட்டலுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: