52வது லீக் போட்டியில் சொந்த மண்ணில் பெங்களூரு நொந்த அணியாய் சென்னை

* ஐபிஎல்லில் இன்று இரவு பெங்களூரில் நடைபெறும் 52வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
* இவ்விரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன.
* அவற்றில் சென்னை 21 போட்டிகளிலும், பெங்களூர் 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.
* எஞ்சிய ஒரு ஆட்டம் (2012) மழையால் ரத்தானது.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 226, பெங்களூரு 218 ரன் வெளுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக சென்னை 82, பெங்களூரு 70 ரன்னில் தங்கள் இன்னிங்சை முடித்துள்ளன.
* இவ்விரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் பெங்களூரு 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* நடப்புத் தொடரில் மார்ச் 28ம் தேதி சென்னையில் நடந்த 8வது லீக் போட்டியில் பெங்களூரு 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
* இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் பெங்களூரு 4-1 என்ற கணக்கில் வெற்றி, தோல்வியை பார்த்துள்ளது.
* சென்னை கடைசி 5ஆட்டங்களில் 1-4 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது.
* ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அதனால் அடுத்தச் சுற்று வாய்ப்புக்கான முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்கிறது.
* அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறிய முதல் அணியான தோனி தலைமையிலான சென்னை இதுவரை 10 போட்டிகளில் ஆடி 2ல் மட்டும் வெற்றி, 8ல் தோல்வியை சந்தித்து வெறும் 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
* எனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டு வீரர்களான அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோர் மற்ற அணிகளில் விளையாடும் போது தொடர்ந்து ஆடும் அணியில் இடம் பெற்றனர். நட்சத்திர வீரரான அஸ்வின் முதலில் ‘இம்பேக்ட்’ வீரராக மாற்றப்பட்டு, அடுத்து ‘சப்ஸ்டியூட்’ வீரராக வெளியில் உட்கார வைக்கப்பட்டார். அதிலும் இளம் அதிரடி வீரர் ஆந்த்ரே சித்தார்த் (18)க்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
* பெங்களூரு எம்.சின்னசாமி அரங்கில் இதுவரை இந்த அணிகள் 11 முறை மோதியுள்ளன.
* கைவிடப்பட்ட ஒரு ஆட்டம் தவிர எஞ்சிய 10 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடி சம பலத்தில் உள்ளன.

The post 52வது லீக் போட்டியில் சொந்த மண்ணில் பெங்களூரு நொந்த அணியாய் சென்னை appeared first on Dinakaran.

Related Stories: