சென்னை எல்லை சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிவு – 3ன் கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 30.10 கி.மீ நீளத்திற்கு புதிய 6 வழிச்சாலை மற்றும் 2 வழி சேவைச்சாலை (இருபுறமும்) அமைக்க 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து வெங்காத்தூர் வரை 10.40 கி.மீ நீளத்திற்கான சாலை பணிகள் ரூ.1,133.20 கோடி மதிப்பீட்டிலும், வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10 கி.மீ நீளத்திற்கான சாலை பணிகள் ரூ.593.27 கோடி மதிப்பீட்டிலும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.70 கி.மீ நீளத்திற்கான சாலை பணிகள் ரூ.963.27 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 30.10 கி.மீட்டர் சாலை பணிகள் ரூ.2,689.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள், 1 ரயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.
மேலும் சென்னை எல்லை சாலை திட்டம் பிரிவு-1ன் கீழ் எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி தச்சூர் வரை ரூ.2,122.10 கோடி மதிப்பீட்டில் 25.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. பிரிவு-1ன் கீழ் தற்போது வரை 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை ரூ.2,689.74 கோடி மதிப்பீட்டில் 30.10 கி.மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலை அமைத்தல் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
The post திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை ரூ.2,690 கோடி மதிப்பீட்டில் 30.10 கி.மீ. நீளத்திற்கு புதிய 6 வழிச்சாலை பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.