கரூர், ஏப். 29:கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி குறுவட்டம், ஈசநத்தம் கிராமத்தில் நவீன் மஹால் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 29ம்தேதி (செவ்வாய்கிழமை) மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த முகாமில், பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும், மருத்துவ முகாம், அரசுத் துறைகள் சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன. எனவே, ஈசநத்தம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் பயன்பெறலாம்.
The post இன்று நடக்கிறது மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.