காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சருடன், பிரதமர் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆலோசனைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடி பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம், உளவுத்துறை அதிகாரிகள், ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் துணை ராணுவப்படையை சேர்ந்தவர்கள், காஷ்மீர் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மற்றொரு புறம் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவலை தடுப்பதற்காக இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. மேலும் இந்திய ராணுவம் ஏதேனும் தாக்குதல் நடத்தி விடுமோ என்கிற அச்சத்தில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தினமும் இரவில் எல்லையில் துப்பாக்கிசூடு நடைபெற்று வருகிறது. இத்தகைய சுழலில் நேற்று இரவு பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள எல்லைகளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதுதொடர்பாக ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று இந்திய ராணுவ உயர் அதிகாரிகளிடம் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியிடம் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்புச் செயலாளர் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனையில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒட்டுமொத்தமாக பஹல்காமில் சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளைப் பிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
* மேலும் காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
* பாகிஸ்தானில் உள்ள முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

The post காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சருடன், பிரதமர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: