வார தொடக்கத்திலேயே அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். கடந்த ஏப்ரல் 1ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 68,080க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஏப்ரல் 22ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 74,320க்கு விற்பனையானது. அதிரடியாக உயர்ந்தது போல அடுத்த நாளே (ஏப்ரல் 23) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கும், ஒரு கிராம் ரூ.275 குறைந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து தங்கத்தின் விலை ஏப்ரல் 24ம் தேதி 2வது நாளாக சரிவை சந்தித்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து 9,005க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 25, 26, 27 ஆகிய நாட்களிலும் தங்கம் விலையில் மாற்றமில்லை. தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாக எந்த மாற்றமின்றி விற்பனையாகிறது.

இந்நிலையில், இன்று மேலும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒருகிராம் ரூ.8,940க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post வார தொடக்கத்திலேயே அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: