காசிமேடு மீன் மார்க்கெட் வெறிச்சோடியது

 

தண்டையார்பேட்டை, ஏப்.28: தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த 14ம் தேதி தொடங்கி 61 நாட்கள் வரை அமலில் உள்ளது. இதன்காரணமாக ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பைபர் படகுகளில் சென்று, கரையோரங்களில் கிடைக்கும் சிறியவகை மீன்களை பிடித்துவந்து விற்பனை செய்கின்றனர். மீன்கள் வரத்துகுறைந்து காணப்பட்டதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பைபர் படகுகளில் பிடித்துவரப்பட்ட கொடுவா, சங்கரா, நெத்திலி, கருப்பு வவ்வால், நண்டு, இறால், கேரை, காணங்கத்த, மத்தி, ஷீலா உள்ளிட்ட சிறிய வகை மீன்களை வாங்கி சென்றனர். இந்த மீன்களின் விலை உயர்ந்திருந்தாலும் வாடிக்கையாளர்கள் பேரம்பேசி ஏலம் எடுத்து வாங்கி சென்றனர்.

The post காசிமேடு மீன் மார்க்கெட் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Related Stories: