மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

 

சென்னை, ஏப்.28: சென்னை மாவட் கலெக்டர் அலுவலகம் ேநற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்,’ வரும் 30ம் தேதி (புதன் கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தரை தளத்தில், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையலாம்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: