மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே கீழ காயாம்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து(35). இவரது மனைவி ராஜேஸ்வரி(28). ஒரு மகள், 2 மகன் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி நடத்தையில் சந்தேகம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவரும் கல்லுபள்ளம் கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் நாடகம் பார்க்க சென்றுள்ளனர்.

பின்னர் வீரமுத்து தனது தாய் லெட்சுமி வீட்டில் குழந்தைகளை விட்டுள்ளார். வீடு திரும்பியதும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீரமுத்துவின் தாய் லெட்சுமி குழந்தைகளை விட சென்றபொழுது ராஜேஸ்வரி கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். வீட்டின் தாழ்வாரத்தில் வீரமுத்து தூக்கில் பிணமாக கிடந்துள்ளார்.

The post மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: