நூறு நாள் வேலை திட்டத்தின்போது ஆலமரம் முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளிகள் பலி

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் பெண்கள் உள்பட 49 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். மதியம் 12 மணியளவில் அதிக வெயில் காரணமாக அங்குள்ள ஆலமரத்தின் அருகே ஒதுங்கினர். அப்போது லேசான காற்று வீசியுள்ளது. இதில் மரத்தின் ஒரு பகுதி வேரோடு முறிந்து விழுந்தது. இதில் சிக்கிய கோவிந்தசாமியின் மனைவி வேண்டா (65), துரைசாமியின் மனைவி அன்னபூரணி (75) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தேவி (54), சம்பூரணம் (60), பச்சையம்மாள் (60), பாஞ்சலை (50), கனகா (58), முத்தம்மாள் (35), அனிதா(55), பத்மாவதி(50), மணிவண்ணன் மகள் ரக்‌ஷிதா(7), மகன் பிரித்திவின்(4), சந்திரசேகர் மகன் கிரிஷாந்த்(5) ஆகிய 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து செய்யாறு தீயணைப்பு படையினர் மற்றும் ேபாலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பச்சையம்மாள் இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post நூறு நாள் வேலை திட்டத்தின்போது ஆலமரம் முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளிகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: