தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியானது வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகள் பயன்படுத்தும் முறை கேரட் மற்றும் கேரட் (தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் (999% 916%, 85%, 80%, 75%) தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை ஐஎஸ் ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி, செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. 9360221280, 9543773337 முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: