பூந்தமல்லி, ஏப்.24: சென்னை மதுரவாயல், ஜானகி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். இவரது 23 வயது மகள் ஏஞ்சல் கெல்சியா(23), அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஏஞ்சல்கெல்சியா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகிலேயே பாத்ரூம் சுத்தம் செய்யும் ஆசிட் பாட்டில் திறந்து இருப்பதைக் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஏஞ்சல் கெல்சியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏஞ்சல்கெல்சியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏஞ்சல் கெல்சியாவிடம் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்ற ஏஞ்சல் கெல்சியா ஆவடி அருகே வந்தபோது போக்குவரத்து போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்தை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு வாங்கி செல்லுமாறு கூறினார்களாம். இதையடுத்து அங்கிருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்த ஏஞ்சல் கெல்சியா பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.