சென்னை: சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு ஆய்வுக்கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. சென்னை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-26ம் ஆண்டிற்கான 12 உறுப்பினர்கள் கொண்ட அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில் 25ம் தேதி (நாளை) பிற்பகல் 3 மணியளவில் சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு ஆய்வுக்கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வுக் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.