இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு FERA என்று அழைக்கப்படும் கூட்டைமைப்பில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் இல்லை அதனால் 24.04.2025 முதல் FERA அறிவித்துள்ள போராட்டங்களில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் களந்து கொள்ளவில்லை. மேலும் FOTA என்ற கூட்டமைப்பிலும் இல்லை அவர்கள் அறிவித்த போராட்டங்களிலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவவர்கள் சங்கம் கலந்து கொள்ளவில்லை. ஏதோ அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாக மேற்கண்ட இரண்டு கூட்டமைப்புகளும் போராட்டங்களை அறிவித்திருக்கின்றார்.
தற்போது நடைபெற்ற முடிந்த வருவாய்துறை மானிய கோரிக்கைகள் விவாதத்தில் கூட வருவாய்துறையினருக்கு அலுவலக கட்டிடங்கள் புதிய பணியிடங்கள் போன்றவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எங்கள் சங்க கோரிக்கைகளை வருவாய்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள்.
எனவே தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் 25.04.2025ம் அடுத்த கட்ட போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எந்த கூட்ட அமைப்பிலும் இல்லை என்பதனை தெரியபடுத்திக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
The post FERA அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது: மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.