இதை அறிந்த அவரது மகன் அன்ட்ரூஸ் நவீன் (32), திருச்செந்தூருக்கு வந்துள்ளார். தாக்குதல் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருதரப்பினரிடையே மோதலாகி ஒருவரை ஒருவர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கல்லால் தாக்கிக் கொண்டனர். இதில் நவீன், கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20), விஜயபிரகாஷ் (27) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பு மோதல் தொடர்பாக நவீன் கொடுத்த புகாரின் பேரில் 3 பேரையும், இதேபோல் நட்டார் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் 8 பேரையும் கைது செய்தனர். திருச்செந்தூர் பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
The post திருச்செந்தூரில் இரு தரப்பு மோதல் 5 பேருக்கு வெட்டு 11 பேர் கைது appeared first on Dinakaran.