பாளை மார்க்கெட் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், அங்கு காய்கறி கடைகளை திறந்து வியாபாரிகள் வணிகம் நடத்த இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. கடைகளுக்கான டென்டர், டெப்பாசிட் தொகை வசூல் உள்ளிட்ட காரணங்களால் மார்க்கெட் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மார்க்கெட்டின் வௌிப்புற பகுதிகளில் உள்ள கடைகள் திறந்தவெளியில் அழகாக காட்சியளிப்பதால், அதில் பல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சுவரொட்டிகளை தினமும் ஒட்டி வருகின்றனர். மார்க்கெட் பஸ் நிறுத்தம் எதிரே இந்த கடைகள் காணப்படுவதால், போஸ்டர் ஒட்டும் மையமாக மார்க்கெட் கடைகள் சமீபகாலமாக மாறிவிட்டன.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மார்க்கெட் கடைகளின் சுவர்களில் காணப்படும் சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவில் அங்கு சென்று போஸ்டர்களை கிழித்து அகற்றினர். பொது இடத்தில் போஸ்டர் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
The post பாளை மார்க்கெட் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.