பீகார் திருமண விழாவில் 2 பேர் சுட்டு கொலை

ஆரா: பீகார் மாநிலம் போஜ்பூரில் திருமண விழாவில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர். பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லஹர்பா கிராமத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமண விழாவில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக 2 கோஷ்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார்
தெரிவித்தனர்.

The post பீகார் திருமண விழாவில் 2 பேர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Related Stories: