அந்த கடிதத்தில் ,”இந்த தருணத்தில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அவசியம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியமானது என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக நமது ஒற்றுமையையும் தீர்மானத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நடவடிக்கையாக அமையும். இந்த கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதே போல் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் மோடியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
The post நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!! appeared first on Dinakaran.