புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற கொலிஜியம் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநில உயர்நீதிமன்றங்களை சேர்ந்த ஏழு நீதிபதிகள், தமிழ்நாடு, கேரளா, குஜராத், கர்நாடகா மற்றும் ஒரிசா உள்ளிட்ட ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதில் குறிப்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வரும் ஹேமந்த் சந்தங்கவுடர் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் கே.சுரேந்தர் உள்ளிட்ட இரு நீதிபதிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை என்பது 75 என்று நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும், தற்போது 65 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ள நிலையில் இப்போது மேலும் இரண்டு நீதிபதிகள் கூடுதலாக நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
The post சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.