இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சரத்குமார் தலை, முகம், கால்கள் மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் ஆவாரம்பாளையம் தனியார் பயிற்சி மையம் அருகில் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக, சிலர் அவரது தம்பி பரத்குமாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவரும் உறவினர்களும் சரத்குமாரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சரத்குமார் இறந்தார்.
அவர் நேற்று முன்தினம் இரவு போதையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் சரமாரியாக வெட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பாகாயம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post வேலூர் விசிக நிர்வாகி கொலை appeared first on Dinakaran.