இதில் தாரகை ஆர்த்தனா பரதநாட்டிய உடையில் நடனமாடி அசத்தினார். மேலும் கடலுக்குள் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் வலைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
இதனை வீடியோவாக பதிவு செய்து, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தனர். கடலுக்கு அடியில் பள்ளி மாணவர்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே எவ்வித முன் அனுமதியும் இன்றி ஆபத்துகள் நிறைந்த பாம்பன் வடக்கு கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்வு குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த பாம்பன் கடலுக்கு அடியில் சென்னை மாணவர்கள் நடனம் appeared first on Dinakaran.