சென்னை: தமிழ்நாட்டில் 2ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா அமைக்கும் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டிருந்தார். அந்தவகையில், இந்த மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபட தயாரிப்பு, திட்ட மேலாண்மை என முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவை கட்டுவதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. சுமார் ரூ.34 கோடியில் 4 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளதால், அடுத்த ஓராண்டிற்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆயிரக்கணக்கனோருக்கு வேலை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்க அரசு டெண்டர் கோரியது appeared first on Dinakaran.