சென்னை: திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவிற்கு தலைமையேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் முதல் நூலை பெற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் நன்றி உரையாற்ற உள்ளார். இவ்விழாவினைச் சிறப்புற ஏற்பாடு செய்து நடத்திடும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராசன் விழாவில் பங்கேற்க கழக முன்னோடிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
The post தமிழ்வேள் பிடி ராஜனின் நூலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார் appeared first on Dinakaran.