ஊட்டி: கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் உள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று wவரை நீலகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று முதல் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை கண்காணிக்க 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி கலெக்டர் கூறுகையில், கடந்த 7-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மட்டுமே இனி வரும் காலங்களில் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படும். இதன்படி கல்லாறு, குஞ்சபனை, மசினகுடி கெத்தை மற்றும் மேல் கூடலூர் ஆகிய 5 சோதனைச்சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
The post நீலகிரி வருவதற்கு இன்று முதல்5 சோதனைச்சாவடியில் இ-பாஸ் சோதனை appeared first on Dinakaran.