வந்தே பாரத் ரயிலுக்கு காவி அடிப்பதில் ஆர்வம் பாதுகாப்பிலும் காட்டுங்கள்: மதுரை எம்.பி பதிவு


மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவில், ‘‘பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம். வந்தே பாரத் ரயிலின் முன்புற கோச், சாதாரண ரயில்களை விட எடை குறைவு என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கையில் கூறியுள்ளார். வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே’’ என கூறியுள்ளார். மற்றொரு பதிவில், ‘‘தெற்கு ரயில்வேயின் தலைமையகத்தில் இந்தி சொற்களையே 3மொழிகளிலும் எழுதி வைத்துள்ளனர்.

சமீபத்தில் என்சிஇஆர்டி பாட புத்தகத்திலும் இந்தி சொற்களையே ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். பாட புத்தகம் துவங்கி ரயில் நிலையம் வரை இந்தியை மற்ற மொழிகளின் வழியாகவும் திணிக்கத் துவங்கியுள்ளனர். எந்த மொழியில் படித்தாலும் இந்தி படிக்க வேண்டும் என்பது நம் மீது மோடியின் அடுத்த கசையடி’’ என்று கூறியுள்ளார்.

The post வந்தே பாரத் ரயிலுக்கு காவி அடிப்பதில் ஆர்வம் பாதுகாப்பிலும் காட்டுங்கள்: மதுரை எம்.பி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: