கடலூர்: கடலூரில் கடந்த 2018ல் சாலையில் சுற்றி திரிந்த, மனநலம் சற்று பாதித்த சிறுமியை போலீசார் மீட்டு கடலூரில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் ஒரு நபர் சென்னையில் ஒரு பள்ளிக்கு சென்று சிறுமியின் படத்தை காட்டி சான்றிதழை கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர், புகார் கொடுத்ததன் அடிப்படையில், சென்னை போலீசார் உதவியுடன் கடலூரில் உள்ள காப்பகத்திற்கு சென்று சிறுமியை பெற்றனர்.7 ஆண்டுக்குப்பின் கிடைத்த மகளை தாயார் கண்ணீர் மல்க அழைத்துச் சென்றார்.
The post சென்னையில் இருந்து 7 வருடங்களுக்கு முன்பு மாயமான சிறுமி கடலூரில் மீட்பு appeared first on Dinakaran.