இந்தநிலையில், கடந்த 17ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருந்து அரும்பாக்கம் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு, ‘’நீங்க தேடிவரும் சிறுமி தற்போது 19 வயது இளம்பெண்ணாக இருக்கிறார். அவரது தாயை அழைத்துவந்து அடையாளம் காண்பித்து அழைத்துச் செல்லலாம்’’ என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 3 போலீஸ்காரர்கள், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் மாயமான சிறுமியின் தாய் அனுராதா ஆகியோரை அழைத்துகொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு சென்றனர்.
இதன்பின்னர் அந்த இளம்பெண்ணை பார்த்ததும் இதுதான் எனது மகள் என்று ஆனந்த கண்ணீர்விட்டப்படி கட்டிப்பிடித்து அழுதுள்ளார். தாயும் மகளும் மாறி, மாறி முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. இதன்பின்னர் சிறுமியாக இருந்தபோது உள்ள அங்க அடையாளங்களை கேட்டபோது தாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயுடன் சிறுமியாக இருந்து மாயமான இளம்பெண்ணை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இளம் பெண்ணின் தாய் கூறுகையில்,’’ கடந்த 2018ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற மகள் மாயமானார். தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது இளம்பெண்ணாக திரும்ப கிடைத்துள்ளார். இதனால் சந்தோஷத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்ைல. இதற்காக தினமும் பாடுபட்ட போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
The post அரும்பாக்கம் போலீசாரின் தொடர் முயற்சியால் 7 வருடங்களுக்கு முன் மாயமான சிறுமி இளம்பெண்ணாக தாயிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.