சென்னை: நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள அஜித்குமாருக்கு பிற நடிகர்களின் ரசிகர்களும் ஆதரவளிக்கும் நபராக வலம் வருகிறார். நடிப்பு, துப்பாக்கிச் சூடு, பைக் ரேஸ் தற்போது கார் ரேஸ் என எந்நேரமும் தன்னை என்கேஜிங்காக வைத்துக் கொள்ளும் ஆளுமையாக அறியப்படுபவர் தான் அஜித்குமார்.
பன்முகத்திறன் கொண்ட அஜித்குமார், கலைப்பிரிவில் ஆற்றிய சாதனைகளை பாராட்டும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்தது. நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு குடும்பத்துடன் சென்ற அஜித் நேற்று மாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அஜித்குமாருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நாளை அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவர் மருத்துவமனைக்கு சென்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அஜித் வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருப்பதாகவே மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
The post நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி appeared first on Dinakaran.