வேலை இழந்த தகுதியான ஆசிரியர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி!

டெல்லி : மேற்கு வங்கத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் பணியினை இழந்த, முறைகேடு புகாரில் சிக்காத ஆசிரியர்கள் பணிகளில் மீண்டும் தொடரலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய ஆசிரியர்களின் நியமனங்களை டிச.31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியமன முறைகேடு வழக்கில் 25,753 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவால், அவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய நிலையில் நீதிமன்றம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post வேலை இழந்த தகுதியான ஆசிரியர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: