ஜம்மு எல்லையில் 7வது நாளாக பாக். துப்பாக்கி சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் மூன்று எல்லை மாவட்டங்களிலும் பல பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்கள் 7வது நாளாக நேற்றும் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை இயக்குனர் ஜெனரல்கள் ஹாட்லைன் மூலமாக செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

எனினும் நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது. குப்வாரா, உரி மற்றும் அக்னூர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டின் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை தொடங்கின. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் விரைவாக பதில் அளித்தனர்.

 

The post ஜம்மு எல்லையில் 7வது நாளாக பாக். துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Related Stories: