தற்போது ஜாமீனில் வந்துள்ள கார் டிரைவர் பல்சர் சுனில் ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் கூறியது:
நடிகர் திலீப் சொல்லித்தான் நடிகையை பலாத்காரம் செய்ய திட்டம் தீட்டினோம். இதற்காக அவர் ஒன்றை கோடி ரூபாய் தருவதாக கூறினார். ஆனால் அதில் இன்னும் 80 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. தேவைப்படும்போதெல்லாம் அவரிடமிருந்து நான் பணம் வாங்கியுள்ளேன். பலாத்காரம் செய்யும்போது நடிகையிடம் விவரத்தை நாங்கள் கூறினோம். அப்போது, தன்னை பலாத்காரம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றும் அவர் எங்களிடம் கூறினார்.
இந்த நடிகை பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பு மலையாள சினிமாவில் மேலும் பல நடிகைகள் இதேபோல பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பல்சர் சுனில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் மறு விசாரணை நடத்த கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க நடிகர் திலீப் ரூ. 1.5கோடி தருவதாக கூறினார்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.