நெல்லிக்குப்பம் அருகே ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

 

நெல்லிக்குப்பம், ஏப். 2: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் கடந்த 25ம் தேதி வளையணி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த 3 வாலிபர்கள் மது அருந்திவிட்டு, பேருந்து நிலையம் அருகில் சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற லாரியை வழிமறித்து நிறுத்தி ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களிடம் சென்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய பி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் தானு (எ) சுகன்வேலு(23), எஸ்.எஸ். நகரை சேர்ந்த கபிலன் மகன் ரங்கேஸ்வரன்(23), அம்பேத்கர் நகரை சேர்ந்த பாரதிராஜா மகன் கல்வி (எ) தனுஷ் ராஜா(20) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லிக்குப்பம் அருகே ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: