மேலும், இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக பாதுகாப்புப்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதேவேளை, வனப்பகுதியில் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த மோதலின்போது போலீசார் 3 பேர் வீரமரணமடைந்தனர். என்கவுண்ட்டர் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
The post காஷ்மீரில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 3 போலீசார் வீர மரணம்! appeared first on Dinakaran.