பாலக்காடு, மார்ச் 27: அரசு பஸ்சிற்கு இடைவெளி கொடுக்காமல் காரை இயக்கியவர்களை கேள்வி கேட்ட டிரைவர், கண்டக்டரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து வடக்கஞ்சேரிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதனால் காரில் பயணித்த நான்கு பேரை டிரைவர், கண்டக்டர் தட்டிக்கேட்டுள்ளனர். இந்நிலையில், பஸ் டிரைவர் கிழக்கஞ்சேரியை சேர்ந்த வினோத், கண்டக்டர் கிழக்கஞ்சேரியை சேர்ந்த சிவதாசன் ஆகிய இருவரை காரில் பயணித்த நான்கு பேரும் அடித்து உதைத்து காயப்படுத்தினர்.
பின்னர் காரில் தப்ப முயற்சித்தனர். அப்போது கார் பழுதடைந்து நின்றது. இதனால் நான்கு பேரையும் ஊர் மக்கள் மடக்கிப்பிடித்து பீச்சி போலீசாரை வரவழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சேலக்கராவை சேர்ந்த நான்கு பேர் என தெரியவந்தது. இதையடுத்து காயமடைந்த அரசு பஸ் நடத்துனர், கண்டக்டர் பட்டிக்காட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அரசு பேருந்துக்கு இடைவெளி தராததை தட்டிக்கேட்ட டிரைவர், கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.