25,000கிமீ நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: 25,000 கிமீ நீளமுள்ள இருவழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  ஒன்றிய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், “நாட்டில் மொத்தம் 25,000 கிமீ நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும். இதேபோல் 16,000 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ரூ.6 லட்சம் கோடியில் ஆறு வழிச்சாலைகளாக 2 ஆண்டில் மாற்றப்படும்.

* வெளிநாட்டினர் விவரங்கள் அவசியம்: மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பதிலளித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘இந்தியாவிற்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டினரும் ஏன் வருகிறார்கள்? எவ்வளவு நாட்கள் இந்தியாவில் தங்க விரும்புகிறார்கள் என்பதை உன்னிப்பாக கண்காணிப்பதை இந்த சட்டம் உறுதி செய்யும். இந்தியாவிற்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டினரின் விவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும் ” என்றார்.

 

The post 25,000கிமீ நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: