புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வழங்கிய உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறைமுகமாக சர்ச்சை கருத்தைக் கூறினார். அமித் ஷாவின் பேச்சு பொய் மற்றும் அவதூறு பேச்சு என்று கூறியும் அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் நோட்டீஸ் அளித்தார்.
இந்நிலையில் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீசை நேற்று அவை தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். அவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறுகையில்,‘‘உரிமை மீறல் நோட்டீசை நான் கவனமுடன் பரிசீலனை செய்தேன். அமித்ஷா பேசியதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எனவே இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்படுகின்றது என்றார்.
The post அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு appeared first on Dinakaran.