தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அணுஉலைத் திட்டங்களின் பாதுகாப்புத் தரங்கள் என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: தமிழ்நாட்டில் புதிய அணுசக்தி ஆலைகளின் கட்டுமானத்தின் போது மற்றும் அதற்குப் பிறகும் பாதுகாப்புத் தரங்களை உறுதிப்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.  மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விகள் வருமாறு:

தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள அல்லது பரிசீலிக்கப்பட்டுள்ள புதிய அணுசக்தி திட்டங்களின் விவரங்களை தெரியப்படுத்தவும்? இந்த திட்டங்களின் நோக்கம் மற்றும் புரிந்துணர்வுகளின் விவரங்கள், குறிப்பாக எந்த மாவட்டங்கள் இந்தத் திட்டங்களுக்காக பரிசீலிக்கப்படுகின்றன? இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதற்கான விவரங்களை தெரியப்படுத்தவும்.

புதிய அணுசக்தி ஆலையின் கட்டுமான காலத்தில் உடனடியாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இந்த புதிய அணுசக்தி ஆலைகளின் கட்டுமானத்தின் போது மற்றும் அதற்குப் பிறகும் பாதுகாப்புத் தரங்களை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை தெரியப்படுத்தவும். இந்த திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை சேகரிப்பதற்கும், அவர்களின் கவலைகளை தீர்ப்பதற்கும் உள்ளூர் மக்களுடன் அரசு எவ்வாறு ஈடுபடத் திட்டமிட்டுள்ளது என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்குமாறும் கேள்வி எழுப்பினார்.

The post தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அணுஉலைத் திட்டங்களின் பாதுகாப்புத் தரங்கள் என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: