*என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் இரானி தான் செயின் பறிப்பு சம்பவத்திற்கு தலைமை ஏற்று நடத்தியது.
*2-வது குற்றவாளியான அம்ஜத் மீசம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அம்ஜத் மீசமின் பெற்றோர் திருட்டு வழக்கில் சிறையில் உள்ளனர்.
*தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பது இரானி கொள்ளையர்களின் பிரதான தொழில்.
*தங்கக் கடத்தல்காரர்களை மடக்கி போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்வதும் இரானிய கொள்ளையர்களின் பிரதான தொழில் ஆகும்.
*திருட்டு தொழிலை விட்டுவிட்டதாக சொந்த மாநில போலீஸை நம்ப வைக்க சல்மான் கூலிங் கிளாஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
*கூலிங் கிளாஸ் வியாபாரம் செய்யும்போது திடீரென சல்மான் மாயமாகி, எப்போதும் போல பெருநகரங்களுக்கு சென்று தங்கள் கூட்டாளிகளுடன் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
*கொள்ளை கும்பலுக்கு இந்தி, அரபி, உருது, பார்சி ஆகிய 4 மொழிகள் அத்துப்படி.
*வழிப்பறி செய்துவிட்டு சொந்த ஊரான அம்பிவெளி, பிதருக்கு சென்றுவிட்டால் நகைகளை பறிமுதல் செய்வது கடினம் என்பது கொள்ளையர்களின் எண்ணம்.
*கொள்ளையர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்தாலும் அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியாது. பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக வழக்கறிஞர்களை வைத்து புகார் செய்து போலீசாருக்கே நெருக்கடி தருவார்கள்.
*கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற அனைவருக்கும் தலைமை பண்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
*போலீசிடம் சிக்கினால் மற்றவர்களை காட்டிக் கொடுக்காமல் இருப்பது எப்படி என பாடம் எடுக்கப்படுகிறது. திருட்டு தொழிலில் ஈடுபட கொள்ளையர்களுக்கு சிறப்பு வகுப்புகள், செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.
*வயது முதுமை காரணமாக தொழிலை கைவிட்டு அடுத்த தலைமுறையை தொழிலில் இறக்கியுள்ளனர் மூத்த திருடர்கள்.
The post இரானிய கொள்ளையர்களுக்கு 4 மொழிகள் அத்துப்படி, திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள் : போலீசார் விசாரணையில் புதிய தகவல்கள்!! appeared first on Dinakaran.